/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீரர் சத்தியமூர்த்தி பள்ளியில் விளையாட்டுப் போட்டி
/
தீரர் சத்தியமூர்த்தி பள்ளியில் விளையாட்டுப் போட்டி
தீரர் சத்தியமூர்த்தி பள்ளியில் விளையாட்டுப் போட்டி
தீரர் சத்தியமூர்த்தி பள்ளியில் விளையாட்டுப் போட்டி
ADDED : ஜூலை 02, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டியில், பள்ளி துணை முதல்வர் சீதா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் திருஞானம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுபாங்கி முன்னிலை வகித்தார்.
இதில், வாலிபால், கிரிக்கெட், கபடி கோ - கோ ஆகிய போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். மேலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் செய்திருந்தார்.