/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜன 10, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: விநாயகம்பட்டில் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அதிகாரி பக்கிரி பூர்ணசந்திரன் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள் வானதி, விசாலாட்சி, ஜெயஸ்ரீபா, கிருத்திகா, தமிழ்தென்றல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.