/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஏப் 24, 2025 05:20 AM

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் ஹோலி பிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
கரியமாணிக்கம் ஹோலிபிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, பூ பந்து, கோகோ, சதுரங்கம், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி நிர்வாகி வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் ஐஸ்வர்யா, ஹரிப்பிரியா தர்ஷிணி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
ஹோலிபிளவர்ஸ்
எஜூகேஷனல் சாரிடபுள் டிரஸ்ட் இயக்குனர் விஷ்ணுப்பிரியன் பங்கேற்று பேசினார். விரிவுரையாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

