/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டுப் போட்டி கலெக்டர் பரிசளிப்பு
/
விளையாட்டுப் போட்டி கலெக்டர் பரிசளிப்பு
ADDED : செப் 17, 2025 11:05 PM

காரைக்கால்: காரைக்காலில் கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் காரைக்கால் உள்விளையாட்டரங்கில் நடந்தது. போட்டியில் நான்கு பிராந்தியங்களை சேர்ந்த 624 மாணவ,மாணவிகள் கால்பந்து, கைப்பந்து , யோகாசனம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா துவக்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இறுதி நாளில் நடந்த விழாவில் கலெக்டர் ரவி பிரகாஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் விரிவுரையாளர் வெங்கடேசன், திட்ட அதிகாரிகள் ரவிக்குமார், பிரகாஷ், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.