தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு


ADDED : மே 28, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:தென் மாவட்டங்கள் அளவிலான காது கேளாதோர் கைப்பந்து, கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், 5வது தென் மாவட்டங்கள் அளவிலான காது கேளாதோர் ஆண்கள் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த காது கேளாதோர் அணிகள் பங்கேற்றன.கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விழுப்புரம் அணி முதலிடம், கடலுார் அணி இரண்டாமிடம் பெற்றன.

கூடைப்பந்து போட்டியில் நெய்வேலி அணி முதலிடம், விழுப்புரம் அணி இரண்டாமிடம், புதுச்சேரி அணி மூன்றாம் இடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் செயலாளர் பாசித், தலைவர் அய்யப்பன், அமைப்பு செயலாளர் சத்தியபுவனம் ஆகியோர் தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் சுந்தரேசன், விளையாட்டுத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினர்.

விழாவில், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் அகரம் தலைவர் சதீஷ்பாபு, ஜிஞ்சர் ஹோட்டலின் மேலாளர் ராஜேஷ், சட்ட ஆலோசகர் சரவணன், பொருளாளர் அஜித்குமார், கோபு, ஹபிலா சைகை மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வென்றவர்கள், வரும் ஜூலை மாதம் திருப்பதியில் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us