/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி மூத்த குடிமக்கள் ஆர்வம்
/
விளையாட்டு போட்டி மூத்த குடிமக்கள் ஆர்வம்
ADDED : செப் 23, 2024 06:23 AM

புதுச்சேரி : மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் மூத்த குடிமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று காலை 9:00 முதல் 12 மணி வரை சாரதாம்பாள் நகர் செயின்ட் பேட்ரிக் பள்ளியில் நடந்தது. ஆண்களுக்கு இசை நாற்காலி, பந்து கைமாறுதல், மெதுவாக நடத்தல், கேரம் போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்களுக்கு இசை நாற்காலி, கோலப்போட்டி, சமைத்த சிறுதானிய உணவு போட்டி, பந்து கைமாறுதல், பாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. ஆர்வமாக மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 29ம் தேதி காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், இசைநாற்காலி, ஓவியப்போட்டி, பந்து கை மாறுதல், பேச்சுப்போட்டி நடக்கிறது. 6 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க வரும்போது அசல் உறுப்பினர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.