/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : மே 08, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது.
கல்லுாரியின் முதல்வர் ஜாஸ்மின் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வியல் துறை இயக்குநர் பிரகாஷ் சாந்து வரவேற்றார்.
இதில், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், நீளம் தாண்டுதல், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.