ADDED : ஆக 29, 2026 07:02 PM
புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 36ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
துவக்க விழாவிற்கு, பள்ளி முதல்வர் சம்பத் தலைமை தாங்கி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து, என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் வரவேற்றார்.
திருக்கனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் முருகன், பள்ளியின் மூலம் வட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி வெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில், வண்ணங்களின் பெயர்களில் மாணவர்கள் 6 அணிகளாக பிரிக்கப்பட்டு, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரையிலும், 6 முதல் பிளஸ் 2 வரையிலும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மியூசிக் சேர், ஓட்ட பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், கோ–கோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
2ம் நாள் போட்டியினை பள்ளியின் துணை முதல்வர் சுசிலா சம்பத் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் மோகன்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விக்னேஸ்வரன், பிரித்தா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
