/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி ஆங்கில பள்ளியில் விளையாட்டு தின விழா
/
பாரதி ஆங்கில பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : ஜன 14, 2026 06:45 AM

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 37வது விளையாட்டு போட்டிகள் தின விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் சம்பத், தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகன் குமார் தலைமை தாங்கி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர். பொறுப்பாசிரியர் சிவபாலன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.விழாவில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மியூசிக்கல் சேர்,ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி மற்றும் கோ - கோ, கிரிக்கெட் போன்ற போட்டிகளை பள்ளி தாளாளர் சம்பத் துவக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் விஷ்வா தலைமையில் ஆசிரியர்கள் விஜயகுமார், நவீன்ராஜ், லலிதா, ஜோதிலட்சுமி, ரேவதி, அனிதா, கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

