/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நிகழ்ச்சி
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நிகழ்ச்சி
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நிகழ்ச்சி
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நிகழ்ச்சி
ADDED : ஜன 05, 2025 05:43 AM
மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகள் கல்லூரியில் ஒரு ஷாட் பிரேக் கேம் ஷோ விளையாட்டு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் சவுண்ட் பார்ட்டி, விட்டா போச்சி அவ்வளவுதான், பாலோவ் தி ஸ்டேப், மாத்தி யோசி, ஸ்பிரே அடிச்சிடுவேன் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளில் மாணவிகள் பங்கேற்று அறிவுதிறன் மற்றும் மனசுக்கும் மூளைக்கும் மகிழ்வு கொடுக்கும் போட்டிகளில் தங்கள் திறமைகளைெவளிப்படுத்தினர்.
பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் கல்லுாரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.