மாநில சிலம்பம் போட்டியில் முத்துரத்தின பள்ளி சாதனை
மாநில சிலம்பம் போட்டியில் முத்துரத்தின பள்ளி சாதனை
UPDATED : ஜூலை 22, 2026 05:31 PM
ADDED : ஜூலை 22, 2026 05:21 PM
புதுச்சேரி: தமிழகத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சென்னை அகத்தியர் சிலமபக்கூடம் மற்றும் ருத்ர தீபம் சிலம்பம் தற்காப்பு அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டிகளில், புதுச்சேரி, கவுண்டன்பாளையத்தில் இயங்கி வரும் முத்துரத்தின அரங்கம் மேனிலைப் பள்ளி, ஆறாம் வகுப்பு மாணவர்கள் மோனிஷ், முகேஷ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
அதேபோல், மதுரையில், கலாலயா சர்வதேச நடனம் மற்றும் இசை அறக்கட்டளை சார்பில், யுவகலா விருது தனித்திறன் போட்டியில் இப்பள்ளி மாணவர் பிரணவ் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
பரிசு வென்ற மாணவர்களை புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜிரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் வாழ்த்தினர்.
