ADDED : ஜூலை 22, 2026 05:11 PM
பாகூர் ஜூலை 23–: பாகூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாகூரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாரக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதை தடுப்பு பிரிவு மற்றும் பாகூர் போலீசார் நேற்று முன்தினம் குருவிநத்தம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகே நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செயதனர்.
அதில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், குருவிநத்தம் வாணகார் தெருவை சேர்ந்த தேசிங்குராஜா மகன் தன்ராஜ் 25; என்பதும், அவர் கரையாம்புத்துாரை சேர்ந்த தனது நண்பர் தினேஷ்குமார் 26; என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக பேக் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 276 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள அவரது நண்பர் தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
