ADDED : ஜூலை 22, 2026 05:02 PM
புதுச்சேரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயன்ற லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலை கண்டித்து, புதுச்சேரியில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், அசோக்பாபு, விக்ரமன், செல்வம், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், மாநிலத் துணை தலைவர்கள் ரத்னவேல், அமாவாசை, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேச விரோத செயல்களுக்கு எதிராக செயல்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை ஆதரித்து போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலை கண்டித்தும், பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, ராகுல் படத்தை கிழித்து ஏறிந்ததுடன், செருப்பால் அடித்தனர். அதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியக்கடை போலீசார் தடுக்க முயன்றதால், போலீசார்– பா.ஜ.,வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் போது பா.ஜ.,வினர் ராகுல் படத்திற்க அவமரியாதை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
