ADDED : மார் 20, 2024 01:37 AM

பாகூர் : புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்சோதனை பணிகளை, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கம் வகையில், தேர்தல் துறையினர் பறக்கும் படைகள்மற்றும் எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யாநேற்று புதுச்சேரி - கடலுார் சாலையில் முள்ளோடையில் எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிவை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி - தமிழக எல்லை பகுதிகளான உச்சிமேடு, சோரியாங்குப்பம், மணமேடு, கரையாம்புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று சோதனை பணிகளை ஆய்வு செய்து, அது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி விட்டு சென்றார்.
ஆய்வின்போது தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

