/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் வழியாக கஞ்சா கடத்தி செல்ல வந்த இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கைது
/
கடல் வழியாக கஞ்சா கடத்தி செல்ல வந்த இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கைது
கடல் வழியாக கஞ்சா கடத்தி செல்ல வந்த இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கைது
கடல் வழியாக கஞ்சா கடத்தி செல்ல வந்த இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கைது
ADDED : ஆக 08, 2025 02:35 AM

காரைக்கால்: காரைக்காலில், கடல் வழியாக கஞ்சா கடத்தி செல்ல வந்த இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், கடந்த மாதம் 24ம் தேதி ரூ. 2 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இலங்கையை சேர்ந்த இருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நிரவி கருக்காலச்சேரி மீனவ கிராமத்தில் சந்தேகப்படும்படியாக படகு ஒன்று கரையோரம் நின்றிருந்தது. தகவறிந்த காரைக்கால் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார், மர்த்தினி, சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் குழுவினர், படகை சுற்றி வளைத்தனர்.
படகில் இருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் இலங்கை, யாழ்ப்பாணம், வியாபாரி மூலை பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மகன்கள் மணிமாறன், 26; மணியராசன், 24; என, தெரியவந்தது. படகில், ஜி.பி.எஸ்., கருவி, மொபைல் போன்கள், பாக்கெட் டைரி, 50 ஆயிரம் பணம், டீசல், மீன்பிடி வலை ஆகியன இருந்தது.
இருவரும் கடல் வழியாக இந்தியாவின் நிலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, கஞ்சா கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுக்குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து மணிமாறன், மணியராசன் ஆகியோரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைந்தனர். அவர்கள் வந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.