/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்சில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் புதுச்சேரியில் விழா தகவல் குறிப்பேடு வெளியீடு

ADDED : செப் 07, 2025 11:08 PM

புதுச்சேரி: பிரான்சில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடப்பதை யொட்டி, புதுச்சேரியில் விழா தகவல் குறிப்பேடு வெளியிடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்காலங்கள் தவிர தினமும் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடக்கும். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தை தரிசனம் செய்கின்ற னர். இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனம் செய்கின்றனர்.
இதேபோல் வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் வெளிநாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
அந்தவகையில், பிரான்ஸ் பாரிசில் இந்தாண்டிற்கான ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோற்சவம் அடுத்த மாதம் 5ம் தேதி காலை 7:00 முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.
தொடர்ந்து மதிய உணவிற்கு பிறகு அர்ச்சனை, இந்திய கலை நிகழ்ச்சிகள் 2:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கின்றது.
இதற்கான விழா தகவல் குறிப்பேட்டை, புதுச்சேரியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் பெற்றுக் கொண்டனர்.
பிரான்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் தலைவர் கண்ணபிரான், செயலாளர் கவுதமன் துரைராஜ், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.