ADDED : ஏப் 26, 2026 08:43 PM

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே. பள்ளியில் 25ம் ஆண்டு விழா நடந்தது.
கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளியில் 'ஸ்பந்தன்-2026' என்ற தலைப்பில் நடந்த 25ம் ஆண்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா வரவேற்றார். பள்ளி நிறுவனர் தியாகராஜன், குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மாறுவேடம், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், பரத நாட்டியம், யோகா, கராத்தே, டிரம்ஸ், கீ போர்ட் மற்றும் ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கலை நிகழ்ச்சியில் ஜி20 ரோபோட் டாக் பங்கேற்று மாணவர்களுடன் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் டில்லியில் நடந்த நேஷ்னல் லெவல் 'மால் கம்பம்' விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பள்ளி பிளஸ் 2 மாணவர் கமலேைஷ பாராட்டினர்.
விழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

