/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் சாதனை
செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் சாதனை
செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 21, 2025 05:22 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலை பள்ளி, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10ம் வகுப்பு மாணவி ஜீவிகா 488 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாணவர் மனோஜ் 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் மோனிஷ் 478 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
70 சதவீத மாணவர்கள் 400க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தனர்.
அறிவியல் பாடத்தில் மாணவர்கள் மோனிஷ், முகமதுஷபி மற்றும் சமூக அறிவியலில் மாணவிகள் ஜீவிகா மற்றும் பிரஷ்ணவி ஆகியோர் சென்டம் எடுத்தனர்.
பிளஸ் 2 தேர்வில், பள்ளியளவில் மாணவர் மோகனபிரியன் 532 மதிபெண் பெற்று முதலிடம், மாணவி மெய்மொழி 531 மதிபெண் பெற்று இரண்டாமிடம் பிடித்தனர். சாதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் மோகன் வாழ்த்தினார்.
அவர், கூறுகையில், 'தரமான கல்வியை குறைந்த கட்டணத்தில் கற்பித்து வருகிறோம். பிளஸ் 2 முடித்து விட்டு செல்லும் மாணவர்கள், நீட் மற்றும் ஜெ.இ.இ., தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில், சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். 10ம் வகுப்பு தேர்வில் 450 மதிபெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு, மேல்நிலை வகுப்பு சேர்க்கை கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கி வருகிறோம்' என்றார். பள்ளி முதல்வர் தமிழ்கொடி, துணை முதல்வர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.