/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித செபஸ்தியார் ஆலய அலங்கார தேர் பவனி
/
புனித செபஸ்தியார் ஆலய அலங்கார தேர் பவனி
ADDED : மே 05, 2025 05:56 AM

காரைக்கால் : காரைக்காலில் புனித செபஸ்தியார் ஆலய 151வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் 151வது ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 1ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
பின்னர் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினம் திருப்பலிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 2ம் தேதி பெரிய தேர்பணி நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஐந்து தேர் மின்அலங்கார தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக தேர் பவனியை ஆலய பங்குத்தந்தை பால்ராஜ் குமார் துவக்கி வைத்தார். தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயம் வந்தடைந்தது. பின் வான வேடிக்கை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.