விளையாட்டு அரங்கத்திற்கு வாஜ்பாய் பெயர் சூட்டும் விழா
விளையாட்டு அரங்கத்திற்கு வாஜ்பாய் பெயர் சூட்டும் விழா
UPDATED : அக் 15, 2026 07:01 PM
ADDED : அக் 15, 2026 06:46 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் நலத்துறை சார்பில், லாஸ்பேட்டை பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டும் விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை இயக்ககம் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் லாஸ்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.
வாஜ்பாஜ் பெயரிலான பெயர் பலகையை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சிவக்கொழுந்து, ராஜசேகரன், எம்.பி., செல்வகணபதி எம்.எல்.ஏ., க்கள் அசோக் ஆனந்த், மீனாட்சிசுந்தரம்,விளையாட்டுத்துறை இயக்குனர் சுதாகர், மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
