/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு கூட்டம்
/
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 08, 2025 11:55 PM

புதுச்சேரி : புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாநிலக்குழு கூட்டம் அஜீஸ் நகரில் நடந்தது.
சங்க தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் உமா சாந்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹரி கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், சத்யா, குப்புசாமி, கந்தன், விஜய், ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் உள்ள சாதிய பெயர்களையும், தெரு பெயர்கள், ஊர் பெயரில் பேட் மற்றும் சேரி ஆகிய வார்த்தைகளை நீக்கிட வேண்டும்.
வருவாய் துறையின் மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்த புதுச்சேரி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பாகூர், குருவிநத்தம் பகுதியில் சுடுகாட்டுப் பாதை வழியே ஆதிதிராவிட மக்கள் செல்லக்கூடாது என்று சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதில், கலெக்டர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.