
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தியதிற்கு மாற்றுத்திறனாளிகள் பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள ரெவேய் சொசியால் சங்கத்தில் நடந்தது.சங்க மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 1,000 உயர்த்திய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆடிட்டர் ஆறுமுகம், தாசில்தார் அய்யனார், கிருஸ்துராஜ், ஒருங்கிணைப்பாளர் சூடாமணி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

