ADDED : அக் 13, 2024 07:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கலைஞர் நுாற்றாண்டு நிறைவு மற்றும் பவள விழாவை யொட்டி, பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப்பின், 16ம் ஆண்டு மாநில அளவிலான பெத்தாங் போட்டி உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
பி.எல்.டி., தலைவர் அருமைசெல்வம் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவர், சிவா போட்டியை துவக்கி வைத்து, பெத்தாங் விளையாடினார்.
மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள 41 கிளப்களை சேர்ந்த 307 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.
இதில், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் கலிய கார்த்திகேயன், சக்திவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எமிலன்,மாணவரணி துணை அமைப்பாளர் அமுதன், பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் புரோஸ்பேர்,பொருளாளர்சூசைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.