/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
/
மாநில அளவிலான பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மார் 18, 2024 03:36 AM

புதுச்சேரி : மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அருண்சர்மா ஷேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் வீரராகு, பிரபாதேவி வீரராகு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி ஷைனர்ஸ் பெத்தாங் கிளப் மற்றும் நியூ பெத்தாங் கிளப் அசோசியேஷன் இணைந்து மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டி உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த 40 கிளப் இணைந்து 334 அணியினர் விளையாடினர். இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், அருண்சர்மா ஷேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் வீரராகு, பிரபாதேவி வீரராகு ஆகியோர் கலந்துகொண்டு . முதல் பரிசாக ரூ.7000 வீதம் 2 நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.6000 வீதம் 2 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.4000 வீதம் 4 நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ.2000 வீதம் 8 நபர்களுக்கும், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கலந்து கொண்ட 16 நபர்களுக்குரூ.1000 வீதம் பரிசுத்தொகை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், சங்க வீரர்கள் ஜோசப், சிமோன், ராஜா, பத்ரிஸ் தெலமாஸ், திவாகரன், சத்தியராஜ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

