/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான கோலப் பயிற்சி முகாம் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் பங்கேற்பு

ADDED : ஜன 02, 2024 05:22 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த கோலப் பயிற்சி முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
'கோலங்கள் ஜாலங்கள்' கோலக் கலை மேம்பாட்டு அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில அளவிலான கோலப் பயிற்சி முகாம் கருவடிக்குப்பத்தில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பரமேஸ்வரி வரவேற்றார். பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமைத் துவக்கி வைத்தார். அமைப்பின் நிறுவனர் மாலதி செல்வம் கலந்து கொண்டு, கோல வகைகள் குறித்தும், நீர், நிறம், கம்பி மற்றும் புள்ளிக் கோலங்கள், கோலமிடப் பயன்படுத்தப்படுகின்ற நவீன பொருட்கள், கோல சுரபி, ரங்கோலி, திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.
முகாமில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கோலக் கலைஞர்கள் பங்கேற்று கலந்துரையாடினர். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பரதநாட்டியக் கலைஞர் லலிதாம்பிகை விக்னேஷ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, எழிலரசி சரவணன், சந்திரலேகா ஆகியோர் செய்திருந்தனர்.