/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான கிராமிய நடனம், நாடக போட்டி
/
மாநில அளவிலான கிராமிய நடனம், நாடக போட்டி
ADDED : நவ 06, 2025 05:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின், மாநில பயிற்சி மையம் சார்பில், மாநில அளவிலான கிராமிய நடனம் மற்றும் நாடகப் போட்டிகள் நடந்தது.
இப்போட்டியில், நான்கு பிராந்தியங்களிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். என்.சி.இ.ஆர்.டி., மக்கள் தொகை கல்வி பிரிவு ஆண்டு தோறும் இப்போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு, மாணவர்களிடையே 21ம் நுாற்றாண்டிற்கான வாழ்வியல் திறன்களை மேம்படுத்தவும், வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தலைப்புகளாக கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் மாணவரிடையே நல்லொழுக்கம், சவால்களை எதிர்கொள்ளும் திறன், பிரச்னைகளை அணுகும் முறை, மனதில் ஆழமாக பதிந்து நல்ல குடிமக்களாக உருவாக உறுதுணையாக அமைந்தது. கிராமிய நடனப் போட்டியின் நடுவர்களாக சாந்தி பாபு, விசித்ரா, முருகன் ஆகியோரும், நாடக போட்டிக்கு கோபி, அண்ணாமலை, ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடுவர்களாக பொறுப்பேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநிலத் திட்டப்பணி அலுவலர் எழில் கல்பனா பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை, மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு அலுவலர் சுகுணா சுகிர்தாபாய், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்தி ருந்தனர்.

