/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான அறிவியல் முகாம்
/
மாநில அளவிலான அறிவியல் முகாம்
ADDED : ஜன 27, 2026 04:35 AM

புதுச்சேரி: லாஸ்பேட் வள்ளலார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2025-26 கல்வி ஆண்டிற்கான, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அளவிலான அறிவியல் முகாம் நடந்தது.
முகாமினை, கவர்னரின் பாதுகாவலர் ரவீந்திர முத்துக்குமார் துவக்கி வைத்து பேசினார். தலைமை விருந்தினராக பள்ளிக் கல்வி இயக்குநர் சிவகுமார் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் திறனைப் பாராட்டிப் பேசுகையில், 'கல்வி எனும் ஆயுதம் கொண்டு அனைத்து தடைகளையும் தகர்த்து எறிய முடியும்.
அது நமது அடையாளத்தை மட்டுமல்லாது, நமது குடும்பம் மற்றும் நாட்டின் அடையாளத்தையே மாற்றும் வல்லமை கொண்டது.
ஆகவே, கல்வியை ஒருபோதும் கைவிடாமல், அதனைத் திறம்படக் கையாண்டு நீங்கள் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். கல்வி எனும் ஆயுதம் கொண்டு இந்த உலகையே நீங்கள் மாற்றலாம் என பேசிமாணவர்களுக்கு ஊக்கமளித்தார். புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் உள்ள 45 வெவ்வேறு பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட திறமையான மாணவர்கள், ஒரு நாள் முழுவதும் தீவிர அறிவியல் ஆய்வுகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
நிறைவு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை பள்ளி கல்வி இயக்குநர் சிவகுமார் வழங்கினார். மேலும், 45 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், சர்வ சிக் ஷா அபியான் மாநிலத் திட்ட இயக்குநர் எழில் கல்பனா, சி.ஐ.எஸ்.ஆர். விஞ்ஞானி டாக்டர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

