மாநில அறிவியல் நாடக போட்டி பிரெசிடென்சி பள்ளி சாதனை
மாநில அறிவியல் நாடக போட்டி பிரெசிடென்சி பள்ளி சாதனை
ADDED : நவ 13, 2026 11:04 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அளவில் நடந்த அறிவியல் நாடக போட்டியில் பிரெசிடென்சி மேல்நிலைப் எலைட் மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி, இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் நாடக போட்டி நடந்தது. இப்போட்டியில் ரெட்டியார்பாளையம் பிரெசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்றனர்.
இன்று (நவ.,13) நடந்த மாநில அளவிலான போட்டியில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி மீண்டும் மாநில அளவில் முதலிடம் பிடித்த தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்று சாதனை படைத்தனர்.
பெங்களூருவில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடகப்போட்டியில் பிரெசிடென்சி மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 6 முறையாக பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, செயலாளர் கவுதம் ஆகியோர் பாராட்டினர்.
