சமூக மருத்துவ சேவையில் முன்னோடியாக எம்.வி.ஆர்., மையம்
சமூக மருத்துவ சேவையில் முன்னோடியாக எம்.வி.ஆர்., மையம்
UPDATED : நவ 13, 2026 10:57 PM
ADDED : நவ 13, 2026 10:52 PM

புதுச்சேரி: நீரிழிவு நோய் விழிப்புணர்வு மற்றும் சமூக மருத்துவ சேவையில் முன்னோடியாக எம்.வி.ஆர்., மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.
15 ஆண்டுகால மருத்துவ சேவையை நோக்கி பயணிக்கும் எம்.வி.ஆர். மருத்துவ மையம், நீரிழிவு நோய் சிகிச்சை, நோயால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தின் நிறுவனரும், இயக்குநருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சமூக மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமூக சேவைகளைப் பாராட்டி, கடந்த ஆண்டு தி டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், சிறந்த நீரிழிவு சிகிச்சை மையத்திற்கான விருதை வழங்கிக் கவுரவித்தது.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், டாக்டர் எம்.ஆர். வித்யா 12 ஆண்டுகளுக்கு முன் ‘நீரிழிவு நோயை வெல்வது எப்படி’ என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வி குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.
நீரிழிவு நோயால் கால்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு, தொற்று மற்றும் ஆறாத புண்கள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயனடைந்துள்ளதுடன், பலருக்குக் கால் அகற்றும் நிலையைத் தவிர்க்கவும் உதவியுள்ளது.
மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கெனத் தனி உணவியல் ஆலோசனைப் பிரிவு மற்றும் சிறப்பு நீரிழிவு பாதப் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டு, பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஒவ்வொருவருக்கும் ஏற்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து உடல் எடைக் குறைப்பு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கான சிறப்பு கிளினிக்கும் செயல்பட்டு வருகிறது. இங்கு நவீன கருவிகள் மூலம் உடல் அமைப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, உடலில் உள்ள கொழுப்பு, தசை, நீர்ச்சத்து மற்றும் தாதுக்களின் அளவுகள் மதிப்பிடப்படுகின்றன. மருத்துவ நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உணவியல் ஆலோசகர்கள் இணைந்து, ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட உணவுத் திட்டம், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல; அதன் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்கி நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமே எங்களின் முக்கிய நோக்கம் என, டாக்டர் வித்யா தெரிவித்தார்.
