மாநில சீனியர் சாம்பியன் ஷிப் பீச் த்ரோபால் பரிசளிப்பு
மாநில சீனியர் சாம்பியன் ஷிப் பீச் த்ரோபால் பரிசளிப்பு
ADDED : செப் 14, 2026 05:42 PM
புதுச்சேரி: சிதம்பரத்தில் நடந்த மாநில அளவிலான சீனியர் சாம்பியன் ஷிப் பீச் த்ரோபால் போட்டியில் குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பின் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய த்ரோபால் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு த்ரோபால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான 2வது சீனியர் சாம்பியன் ஷிப் பீச் த்ரோபால் போட்டிகள் நடந்தது. சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த போட்டிகளில் குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியும், சிதம்பரம் அணியும் இறுதி போட்டியில் மோதியது.
அதில், குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய த்ரோபால் பெடரேஷன் பொருளாளரும், தமிழ்நாடு த்ரோபால் அசோசியேஷன் தலைவருமான பாலவிநாயகம் பங்கேற்று, பரிசு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். இதில், குமாரப்பாளையம் வாரியர் அணியின் பயிற்சியாளர் சோமசுந்தரம், மேலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஏற்பாடுகளை கடலுார் மாவட்டம் த்ரோபால் சங்க நிர்வாகிகள் குமார் தலைமையில் சாமியார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.
