/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில சிலம்பம் போட்டி: ஆரோவில் பள்ளி சாம்பியன்
/
மாநில சிலம்பம் போட்டி: ஆரோவில் பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 14, 2025 01:09 AM

பாகூர் : புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், 5வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி பாகூரில் நடந்தது.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் அனுமதியுடன், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், 5வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி, பாகூர் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. போட்டியை, குருவிநத்தம் ஆனந்தன் துவங்கி வைத்தார். சிலம்பம் பேராசான் திராசு கணபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விளையாட்டு வீரர்கள் நல சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டார்.
போட்டயில்,ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் இசை அம்பலம் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் வென்றனர். மாணவர் கணேஷ் வெள்ளி; மாணவி யோக இதயஸ்ரீ, மாணவர் தர்மேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் வளவன் பதக்கங்கள்வழங்கி பாராட்டினார்.
போட்டியை கரிகால சோழன் தற்காப்புகலை கூட நிறுவனர் அன்புநிலவன் ஒருங்கிணைத்தார்.
தே சிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்களை, இசை அம்பலம் பள்ளி தாளாளர் சஞ்சீவ் ரங்கநாதன், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் பாராட்டி ஊக்குவித்த னர். பயிற்சியாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.