/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில வரி வருவாய் உயர்வு மத்திய அரசு கொடை குறைந்துள்ளது
/
மாநில வரி வருவாய் உயர்வு மத்திய அரசு கொடை குறைந்துள்ளது
மாநில வரி வருவாய் உயர்வு மத்திய அரசு கொடை குறைந்துள்ளது
மாநில வரி வருவாய் உயர்வு மத்திய அரசு கொடை குறைந்துள்ளது
ADDED : மார் 19, 2025 05:28 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் உரை மீதான பொதுவிவாதத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரியில் 400 அங்கன்வாடிக்கு மேல் உள்ள நிலையில், அதனை புதுப்பிக்க ஒதுக்கிய தொகை 50 முதல் 60 அங்கன்வாடிகளை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
அனைத்து அங்கன்வாடிகளையும் சரிசெய்து தர வேண்டும். குழந்தைகள் வாழ்க்கை தொடங்கும் போதே அவலமான இடத்தில் துவங்கினால் வாழ்க்கை எப்படி இருக்கும். கூடுதலாக நிதி ஒதுக்கி அங்கன்வாடிகளை சீரமைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் பகுதி கோவில்கள் ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
இதனை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்றுள்ள நிலையில், கடந்த காலங்களில் வாங்கிய கல்வி கடனை அரசு ரத்து செய்ய வேண்டும்.
மாநில வரி வருவாய் உயர்ந்துள்ளளது. ஆனால், மத்திய அரசு கொடை வளரவில்லை. கடந்த 2016-17ம் ஆண்டில் மத்திய அரசு கொடை 32 சதவீதமாக இருந்தது. தற்போது 7 சதவீதம் குறைத்து, 25 சதவீதம் கொடுக்கிறார்கள். மத்திய அரசின் தொகை கூடுதலாகவில்லை.
வடமாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்கு மேல் கடன் அளவு உள்ளது. அதனால் அதிக கடன், கொடையும் பெறுகிறார்கள்.
கூடுதலாக மத்திய அரசு கொடை வாங்க வேண்டும். கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பேசினார்.