/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்து நிகழக்கூடிய இடங்களில் கவனம் அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
/
விபத்து நிகழக்கூடிய இடங்களில் கவனம் அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
விபத்து நிகழக்கூடிய இடங்களில் கவனம் அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
விபத்து நிகழக்கூடிய இடங்களில் கவனம் அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
ADDED : ஜன 26, 2025 04:39 AM
தமிழகத்தில் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில், பஸ்களை கவனமாக இயக்குமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், முக்கிய வழித்தடங்களில், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில், விழுப்புரம் பழைய பஸ் நிலையம், மாதாகோவில், கோலியனுார் கூட்ரோடு, கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, வில்லியனுார், மூலகுளம்.
கடலுார் மார்க்கத்தில் வாணியம்பாளையம், கண்டரக்கோட்டை, ராசாப்பாளையம், மேல்பட்டாம்பாக்கம் கூட்ரோடு, செம்மண்டலம், போஸ்ட் ஆபீஸ் வளைவு ஆகிய பகுதிகள் வாகன நெரிசல் மிகுந்த மற்றும் விபத்து நிகழ வாய்ப்பு இடங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி, மதுரை மார்க்கத்தில், அரசூர், உளுந்துார்பேட்டை டோல்கேட், வேப்பூர் கூட்ரோடு, தொழுதுார் கூட்ரோடு, ஆவட்டி, பெரம்பலுார், சமயபுரம் டோல்கேட் பகுதி, பால்பண்ணை பஸ் நிறுத்தம், விராலிமலை கூட்ரோடு, துவரங்குறிச்சி கூட்ரோடு, கொட்டாம்பட்டி, விநாயகபுரம் கூட்ரோடு ஆகிய இடங்களில் கவனமாக வாகனத்தை இயக்கிட வேண்டும்.
சேலம் மார்க்கத்தில், அரசூர், எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம் புறவழிச்சாலை, தச்சூர், சின்னசேலம், ஆத்துார் பைபாஸ், அயோத்தியா பட்டிணம் பை பாஸ், சேலம் பைபாஸ், சேலம் பஸ் நிலையம், பெங்களூரு மார்க்கத்தில் திருக்கோவிலுார், மணம்பூண்டி, திருவண்ணாமலை புறவழிச்சாலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகள் விபத்து நிகழ வாய்ப்புள்ள இடங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளன.
மேற்கண்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பஸ் டிரைவர்கள் விழிப்புடன் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படாதவாறு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

