/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்நோக்கு விளையாட்டரங்கில் மாநில யோகாசன போட்டி
/
பல்நோக்கு விளையாட்டரங்கில் மாநில யோகாசன போட்டி
ADDED : செப் 11, 2025 03:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசன போட்டி லாஸ்பேட்டை, பல்நோக்கு விளையாட்டரங்கில் நடந்தது.
போட்டியை சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் துணை தலைவர் ஆனந்த பால யோகி பவனானி மற்றும் சங்க நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பொதுச் செயலாளர் தயாநிதி யோகாசன செயல் முறையை விளக்கினார்.
போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் பங்கேற்றனர்.
உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் , எஸ்.பி., ரங்கநாதன், புதுச்சேரி ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் தனசேகர், யோகாசன பாரத் துணை தலைவர் ஆனந்த பால யோகி பவனானி, பாரத் பார்வையாளர் திஷா டாங் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்க சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க மூத்த துணை தலைவர் கஜேந்திரன், துணை தலைவர் தேவசேனா பவனானி, பொருளார் சண்முகம், யோகாஞ்சலி நாட்டியாலாய மூத்த ஆசிரியர் லலிதா சண்முகம் ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
போட்டியின் பொறுப்பாளர் ஸ்வருப் ரமணன், மேலாளர் வித்தியாலட்சுமி மற்றும் நடுவர்கள் கவுரவிக்கப்பட்டனர். சங்க துணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.