தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாநில யோகா போட்டி பரிசளிப்பு விழா

மாநில யோகா போட்டி பரிசளிப்பு விழா

மாநில யோகா போட்டி பரிசளிப்பு விழா


UPDATED : நவ 18, 2026 05:34 PM

ADDED : நவ 18, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:34 PM ADDED : நவ 18, 2026 05:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் அமைப்பு சார்பில் மாநில அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா கீதானந்தா ஒருங்கினைந்த சிகிச்சை அகாடமியில் நடந்தது.

பாரம்பரிய யோகாசனம், தனி நபர் கலைநய யோகாசனம், இரட்டையர் கலைநய யோகாசனம் மற்றும் இரட்டையர் ரித்மிக் யோகாசனம் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.

சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி குத்து விளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார். சங்க துணை செயலாளர் ரீனா ஜோசப் வரவேற்றார். பொது செயலாளர் தயாநிதி ஆண்டறிக்கை விளக்கினார்.

தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், நேரு எம்.எல்.ஏ., விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

சங்க மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், துணைத் தலைவர் தேவசேனா பவனானி, பொருளாளர் சண்முகம், சுவாமி விவேகானந்தா யோகா மையத்தின் இயக்குனர் செந்தில் குமார், யோகாஞ்சலி நாட்டியாலயம் மூத்த யோகா ஆசிரியர் லலிதா சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us