/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய உள்துறை செயலரிடம் தி.மு.க., மனு
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய உள்துறை செயலரிடம் தி.மு.க., மனு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய உள்துறை செயலரிடம் தி.மு.க., மனு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய உள்துறை செயலரிடம் தி.மு.க., மனு
ADDED : செப் 24, 2024 12:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி வந்த மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகனை, தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத் சந்தித்து அளித்த மனுவில்;
புதுச்சேரியின் நீண்ட நாள் பிரச்னையாக மாநில அந்தஸ்து இருந்து வருகிறது. சட்டசபையில் பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து மூலம் கல்வி, விளையாட்டு, சுற்றுலா, தொழில் மற்றும் சுகாதார துறைகளில் தன்னிறைவு அடைய முடியும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். நிதி ஆயோக் குழுவில் புதுச்சேரியைச் சேர்த்து, தனி அரசு பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு மூலதன உள்கட்டமைப்பு நிதியில் ஒரு முறை ரூ. 5000 கோடி வழங்க வேண்டும். வருவாய் இடைவெளியை போக்க அளிக்கும் மானியம், பிரஞ்சு அரசுடன் ஏற்படுத்திய ஒப்பந்தபடி சரியான முறையில் அதிகரிக்கவில்லை.
வேலைவாய்ப்பு வழங்கிய ஏ.எப்.டி., சுதேசி மில், பாரதி மில், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி சிக்கல்களுக்கு தீர்வு கண்டு வேலை வாய்ப்புகளை மீட்டெடுக்க வேண்டும்.
காரைக்கால் துறைமுகம் தனியார் மயமாக்குவதில் வெளிப்படை தன்மை நடக்கவில்லை. அதனால் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிப்மரில் குருப் சி பணிகளுக்கு உள்ளூர்வாசிகளுக்கு இடஒதுக்கீடு நீட்டிக்க வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து பாட பிரிவுகளில் வழங்க விரிவுப்படுத்த வேண்டும். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

