ADDED : பிப் 26, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் காமராஜர் கல்வி மையத்தின் சார்பில், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப் பட்டது.
குருவிநத்தம் காமராஜர் கல்வி மையம் சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ -மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு, பொதுத் தேர்வு எழுதுவது சம்பந்தமாக மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி, எழுது பொருட்களை வழங்கினார். ஏற்பாடுகளை தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.

