/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
/
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
ADDED : அக் 07, 2025 01:24 AM
புதுச்சேரி; புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.
இது குறித்து புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்திய விலங்குகள் நல வாரியம் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மூன்று வருடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்ப டையில் இன்று (நேற்று) 6ம் தேதி முதல் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (நே ற்று) இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங் களில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து வெறிநாய்க்கடி (ரெபிஸ்) தடுப்பு ஊசிகள் செலுத்தி, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் விடுவிக்கப்படும்.
இந்த நடவடிக்கை உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாக தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நாய்கள் தொடர்பான புகார்களை 7598171674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.