/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
/
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : அக் 07, 2025 01:24 AM
புதுச்சேரி,; முதலியார்பேட்டை பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
முதலியார்பேட்டை விடுதலை நகரில் உள்ள உழந்தை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள கீழ்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (8ம் தேதி )மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, விடுதலை நகர் குடியிருப்பு பகுதி முழுவதும், மற்றும் அதனைச் சார்ந்த பாரதி மில் நகர், அய்யப்பசாமி நகர், திரு.வி.க., நகர், பாரதிதாசன் நகர், புன்கரே வீதி கிழக்கு, அப்துல்கலாம் நகர் மேற்கு பகுதி முழுவதும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.