ADDED : நவ 13, 2024 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; தட்டாஞ்சாவடி தொகுதி பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உதவி தொகை வழங்கினார்.
புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த புதிய பயனாளிகள் 100 நபர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணையினை முதல்வர் ரங்கசாமி தனது இல்லத்தில் வழங்கினார்.
ரமேஷ் எம்.எல்.ஏ., மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

