/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல் முன்னெச்சரிக்கை அதிகாரிகள் ஆலோசனை
/
புயல் முன்னெச்சரிக்கை அதிகாரிகள் ஆலோசனை
ADDED : நவ 29, 2024 04:02 AM
அரியாங்குப்பம்: புயல் மற்றும் மழை பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குறித்து அரியாங்குப்பத்தில், அனைத்து துறைகளின் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தாசில்தார் பிரித்திவி, மின்துறை, உதவிப் பொறியாளர்கள் ஜோசப், சக்திவேல், நகராட்சி முதன்மை இன்ஜினியர் சிவபாலன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உட்பட பொதுப்பணித்துறை, சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புயல் மற்றும் கனமழையால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளான, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீர் செய்வது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றியும், எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

