/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : டிச 21, 2024 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் அருகே வங்கக் கடலில் நேற்று மாலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது ஒடிசா மாநிலம் கோபால்பூரின் அருகே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் தெற்கே 450 கிலோ மீட்டர் துாரத்தில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.