அரும்பார்த்தபுரம் பைபாசில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
அரும்பார்த்தபுரம் பைபாசில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
UPDATED : நவ 29, 2026 07:40 PM
ADDED : நவ 29, 2026 07:38 PM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாசில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதுச்சேரி நுாறடி சாலை மேம்பாலம் முதல் அரும்பார்த்தபுரம் வரை பைபாஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி வில்லியனுார், மணவெளி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் சாலையில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் இரவு விழுப்புரத்தில் இருந்த வந்த பயணிகள் ரயில், டிராக்கில் இருந்த எருமை மாடு மீது மோதி விபத்து ஏற்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சென்றது.
அதேபோல் சாலையின் குறுக்கே திரியும் மாடுகளால் விபத்து நிகழ்ந்து, உயிரிழப்பு ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
