sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் 'அட்வைஸ்'

/

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் 'அட்வைஸ்'

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் 'அட்வைஸ்'

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் 'அட்வைஸ்'


ADDED : நவ 24, 2024 07:21 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் பேசியதாவது:

நம்முடைய உடல் மிஷின் கிடையாது. அதை அடித்து துவைச்சு கொண்டே இருக்கக் கூடாது. போதுமான ஓய்வும், துாக்கமும், உணவும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது துாங்க வேண்டும்.

இரவில் துாங்க நேரம் இல்லாதபோது, பகலில் நேரம் கிடைக்கும்போது துாங்கிவிட வேண்டும். நமக்கு வேலை, பணம் முக்கியம் தான். ஆனால்ஆரோக்கியத்தை தொலைத்துவிட முடியுமாஎன்பதை யோசிக்க வேண்டும். பணத்தை செலவிட்டு ஆரோக்கியத்தை வாங்கிவிட முடியாது.

குடி, போதை பழக்கத்தினால் வரக்கூடிய மூளை சுருக்கங்கள், மன அழுத்ததால் ஏற்படும் சுருக்கத்தை காட்டிலும் குறைவுதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கவலைப்படுவதை முதலில் விடுங்கள். நம்முடைய கட்டுபாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்து கவலைப்படும்போது, நம்முடைய உடம்பு பாதிக்கிறது.

இதனால், 40 வயதில் வயதான தோற்றத்தை பெறுகின்றனர். அப்படியே வயதான காலத்தில் வரவேண்டிய நோய்களும் வந்துவிடுகின்றன. இதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்க்கைக்கான திட்டமிடல் இருக்க வேண்டும்.

காபி குடிப்பதால் கூட நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாததை நினைத்து நம்மை நாமே மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்ள கூடாது. நாம் ஒல்லி, குண்டு, உயரம் குறைவு எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. கடவுள் நம்மை எப்படி படைத்தாரோ அப்படியே ஏற்றுக்கொண்டால் மன அழுத்தம் என்பது கிடையாது.

நம்மை பற்றி யார் எது வேண்டுமென்றாலும் சொல்லட்டும். நம்மை பொருத்தவரை நாம் தான் அழகு என்பதை உணர்ந்துவிட்டால் போதும், மன அழுத்தம் துளியும் இருக்காது.

அனைத்து தொழில்களிலும் மன அழுத்தம் இருக்கிறது. அதை எதிர்கொள்ள தெரிந்தால் போதும் எந்த மன அழுதத்தையும் நெருங்க முடியாமல் செய்ய முடியும்.மன அழுத்தத்தை நல்ல மன அழுத்தம், அதீத மன அழுத்தம், ைஹபர்ஸ்ட்ரெஸ், ைஹபோஸ்ட்ரெஸ் என நான்கு வகையாக பிரிக்கலாம்.

புதிதாக ஒரு வேலையை செய்யும்போது ஏற்படும் படபடப்பு யூஸ்ஸ்ட்ரெஸ் எனப்படும் நல்ல மன அழுத்தம்.

இது மூளைக்கு உந்துதல் தரக்கூடியது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஒரு சோகம், ஒரு இழப்பினை சந்திக்கும்போது ஏற்படுவது அதீதி மன அழுத்தம்.

நாம் வேலை செய்ய தயாராக இருக்கும்போது வளங்கள் இல்லாமல் இருப்பது, வேலை செய்யும் இடத்தில் நம்மை ஒதுக்க டார்கெட் செய்து கார்னர் செய்யும்போது நமக்கு ஏற்படுவது ைஹபர்ஸ்ட்ரெஸ்.

உண்மையாக மன அழுத்தம் ஏற்பட கூடிய இடங்களில் ஒருவருக்கு மன அழுத்தமே இல்லாமல் இருப்பதை கண்டு நமக்கு ஏற்படுவது. ைஹபோஸ்ட்ரஸ். உதாரணமாக குழந்தைகள் படிக்காமல் இருப்பதை கண்டு நாம் டென்ஷன் அடைவது இந்த வகையை சேர்ந்தது.

இதில் எந்த வகை மன அழுத்தம் நமக்கு ஏற்படுகிறது என்பதை அறிந்து, அதற்கு தீர்வு காண முயல வேண்டும். ஏனெனில் ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனால், அதன் தீவிரத்தை பலரும் உணர்வதே இல்லை. உடல் ரீதியாக ஒருவர் பிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வு ரீதியாகவும் ஒருவர் பிட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

நமக்கு யாராவது மன அழுத்தம் கொடுத்தால், அதற்கான காரணத்தை யோசித்து, ஒன்றிரண்டு பதில்களை தேடினால் போதும். யார் மீதும் நமக்கு கோபம் ஏற்பட்டு, மன அழுத்தம் வராது. உளவியல் அழகே இது தான்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us