/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம்; மெட்வே மருத்துவமனை ஆலோசகர் அட்வைஸ்
/
பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம்; மெட்வே மருத்துவமனை ஆலோசகர் அட்வைஸ்
பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம்; மெட்வே மருத்துவமனை ஆலோசகர் அட்வைஸ்
பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம்; மெட்வே மருத்துவமனை ஆலோசகர் அட்வைஸ்
ADDED : ஆக 04, 2025 12:56 PM

விழுப்புரம்: மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என, விழுப்புரம் மெட்வே மருத்துவமனை பிசிஷியன் மற்றும் டையாபெட்லாஜிஸ்ட் சீனியர் ஆலோசகர் காயத்ரி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மன அழுத்தம் ஒருவரின் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இன்சுலின் ஹார்மோன் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மன அழுத்தம் இன்சுலின் உற்பத்தியை குறைத்து, அது வேலை செய்வதை தடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் நேரடியாக சர்க்கரை நோயை உருவாக்காது. ஆனால், நம் இயல்பு வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்து, முடிவில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு நோய்களுக்கு வழி வகுக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம் ஒரு மறைமுகமான காரணியாக உள்ளது.மன அழுத்தம் கண்டிப்பாக சர்க்கரை அளவை அதிரிக்கவோ, புதிதாக சர்க்கரை நோயை உண்டாக வாய்ப்புள்ள ஒரு பெரிய பிரச்னை. எதனால் உங்களுக்கு மன அழுத்தம் வருகிறது என்பதை கவனித்து அதனை சரி செய்வது அவசியம்.
தொடர் மன அழுத்தத்தை, தொடர் பரபரப்பான வழ்க்கை முறையை குறைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க நீரிழிவு நோயாளிகள் 20 நிமிட நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மெட்வே மருத்துவமனையில் நீரிழிவு நோய் கண்டறிதல் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன.
உங்கள் மனதை சுதந்திரமாக, மன அழுத்தம் இல்லமால் வைத்துக்கொள்ளுங்கள். நீரிழிவு நோயினால் வரும் பிரச்னையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.