தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை, விழிப்புணர்வு பயிற்சி

புதுச்சேரி போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை, விழிப்புணர்வு பயிற்சி

புதுச்சேரி போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை, விழிப்புணர்வு பயிற்சி


UPDATED : நவ 25, 2026 06:02 PM

ADDED : நவ 25, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:02 PM ADDED : நவ 25, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான, மன அழுத்த மேலாண்மை மற்றும் விழிப்புணர்வுப் பயிற்சி நடந்தது.

தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியை, மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயச்சந்திரன் துவக்கி வைத்தார். புதுச்சேரி போலீஸ் பயிற்சிப் பள்ளி முதல்வர் ரங்கநாதன் எஸ்.பி., வரவேற்றார். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் கலந்து கொண்டனர்.

மனநல மருத்துவத் துறைத் தலைவர் பாலன் பொன்மணி ஸ்டீபன், ‘மனநலம் மற்றும் உளவியல் நல்வாழ்வு குறித்த அறிமுகம்’ என்ற தலைப்பிலும், டாக்டர் கஜலட்சுமி, ‘மனச்சோர்வு, பதற்றம், பணிச்சோர்வு மற்றும் மனநலப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்’ என்ற தலைப்பிலும், டாக்டர் அரவிந்தன், ‘போதைப்பொருள் பயன்பாடு, மதுப்பழக்கச் சார்பு மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பு’ என்ற தலைப்பில் பயிற்சி அளித்தனர்.

மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் மதன் ‘தற்கொலைத் தடுப்பு மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாளுதல்’ என்ற தலைப்பிலும், இணை பேராசிரியர் அவின், ‘சட்டம் மற்றும் சிறார் குற்றச்செயல்கள்’ என்ற தலைப்பிலும் பேசினார்.

கோப மேலாண்மை மற்றும் மோதல்களைத் தீர்த்தல் என்ற தலைப்பில் தேசிய மனநலத் திட்டக் குழுவினர் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வை நடத்தினர். ஏற்பாடுகளை, தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மனநல மருத்துவத் துறை செய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us