ADDED : நவ 05, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் அறிவித்த ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்ககோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன்படி, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலவேந்திரன், நிர்வாகிகள் அங்கப்பன், மாரிமுத்து, பாலு, பரந்தாமன், ராஜா, கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், அறிவித்தபடி வவுச்சர் ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இல்லையெனில், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

