தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காய்ச்சலால் மாணவி சாவு

காய்ச்சலால் மாணவி சாவு

காய்ச்சலால் மாணவி சாவு


ADDED : நவ 23, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (நவ.,23) காய்ச்சல் காரணமாக கல்லுாரி மாணவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்தார். இந்நிலையில், மூலகுளம் பிச்சைவீரன்பேட்டை புது குடியிருப்பு பகுதியை சேர்ந்த குமரேசன் மகள் ஹரிணி,19; கல்லுாரி மாணவி. இவர் கடந்த 14 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு வாந்தி வயிற்று போக்கு இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று (நவ.,22) புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவி எந்த காய்ச்சல் காரணமாக இறந்தார் என்பது குறித்து சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us