/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காததால் விரக்தியில் மாயமான மாணவர்
/
எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காததால் விரக்தியில் மாயமான மாணவர்
எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காததால் விரக்தியில் மாயமான மாணவர்
எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காததால் விரக்தியில் மாயமான மாணவர்
ADDED : ஆக 23, 2025 07:09 AM
புதுச்சேரி : புதுச்சேரி, சண்முகாபுரம் மாணிக்கசெட்டியார் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சித்தார்த்தன், 19. இவர் கடந்த ஆண்டு, (2024) நீட் தேர்வு எழுதினார். அவர் விரும்பிய எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்கவில்லை.
இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். அதி லும் அவருக்கு சீட் கிடைக் காமல் பி.டி.எஸ்., சீட் கிடைத்தது. வேறு வழியில்லாமல், பி.டி.எஸ்., படிக்க பெற்றோரிடம் ஒப்புக் கொண்டார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர்அவர்வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
முன்தாக, வீட்டின் மெயின் கதவில் கடிதம் ஒட்டப்பட்டிருந்தது.
என்னை யாரும் தேட வேண்டாம், நான் டாக்டர் படிக்க தான் ஆசைப்பட்டேன். மீண்டும் நீட் பயிற்சி மூலம், நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ்., படித்து டாக்டர் ஆவேன்.
அதனால், என்னை யாரும் தேட வேண்டாம் என, கடித்தில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைத்தனர்.
இதுகுறித்து, அவரது தந்தை மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.