/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுடேரி பாரத் பள்ளியில் மாணவர் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு

ADDED : செப் 09, 2025 06:39 AM

வில்லியனுார் : ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவ தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றaவர்கள் பதவியேற்றனர்.
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவ தலைவர் மற்றும் விளையாட்டு துறை தலைவர்கான தேர்தல் நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாணவத் தலைவர், தலைவி மற்றும் விளையாட்டு துறை தலைவர், துணைத் தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு பகுதி போலீஸ் எஸ்.பி., ரகுநாயகம் மற்றும் சமுதாய நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்தினர்.
அதனை தொடர்ந்து பள்ளியில் சமுதாய நலப்பணித்திட்ட மாணவர் இயக்கம் துவங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.